February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில்

திருச்சியில் விவசாயிகள் இன்று திடீர் போராட்டம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை :

திருச்சியில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கைதுசெய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும், தமிழகம் முழுவதும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யகோரியும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்ககோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று கரூர் பைபாஸ் சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும்போது,
டெல்லியில் சென்று லாபகரமான விலை கேட்டு போராடச் சென்ற தன்னுடைய காலை மத்திய பிரதேச போலீசாரை கொண்டு உடைத்துள்ளதாகவும், காவல்துறையைக் கொண்டு விவசாயிகளை மிரட்டும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கும் நியாயம் கேட்டுத்தான் போராடுகிறோம்.
அமைச்சர்கள் யாராவது வந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம். இல்லாவிட்டால் சாகும்வரை போராட்டத்தை தொடர்வோம். விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து சென்னையில் சென்று போராடுவோம் என தெரிவித்தார்.
இந்த நிலையில் தகவல் அறிந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அமைச்சர் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
[12:37 pm, 17/12/2025] +91 63696 94144: பொங்கல் தொகுப்புடன் ஐந்தாயிரம் ரூபாய் போனஸ் வழங்க கோரி

கட்டுமான தொழிலாளர்கள் இன்று திருச்சியில் போராட்டம் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு

திருச்சி 17 :

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புடன் போனஸ் ரூ 5000 வழங்க வேண்டும். தொழிலாளருக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். பெண் தொழிலாளிக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். பென்ஷனை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இயற்கை மரணம், விபத்து, திருமணம், கல்வி போன்ற உதவி தொகைகளை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட விண்ணப்பித்த அனைவருக்கும் வீடு கட்ட உடனடியாக நிதி வழங்கி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி புறநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று
செங்குளம் காலனியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான சங்க புறநகர் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சம்பத், கட்டுமான சங்க புறநகர் மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாவட்ட பொருளாளர் மரியபுஷ்பம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், பெல் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பரமசிவம் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று திருச்சி மாநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் மாறன், மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் உலகநாதன், முருகன், வெள்ளைச்சாமி, வெங்கடேசன், சக்திவேல், வனஜா உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
[12:38 pm, 17/12/2025] +91 63696 94144: இ -பைலிங் முறையை கைவிட கோரி உயர் நீதிமன்றத்திற்கு
தபால் நிலையம் மூலம் கடிதம் அனுப்பி வழக்கறிஞர்கள் போராட்டம் திருச்சி நீதிமன்றத்தில் இருந்து அனுப்பினர் :

திருச்சி 17:
நீதிமன்றங்களில்
இ -பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதை கண்டித்தும், அதற்கான கட்டமைப்புகளை செய்து கொடுத்த பின்பு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும்,குடும்ப நீதிமன்றங்களில் வழக்காடிகளே நேரடியாக இ -பைலிங் செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யக்கோரியும் ,
இ -பைலிங் செய்வதற்கு ஏராளமான சேவை மையங்களை தொடங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்
வழக்கறிஞர்கள்
கடந்த இரண்டாம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
உயர்நீதிமன்ற பதிவாளர்,பார் கவுன்சில் சேர்மன் மற்றும் உயர் நீதிமன்ற இ – கமிட்டி பதிவாளர் இன்று தபால் மூலம் கடிதம் அனுப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி சங்கத் தலைவர் எஸ்.பி.கணேசன், திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சி.முத்துமாரி ஆகியோர் தலைமை தாங்கினார்.
பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திரகுமார், துணை தலைவர் வடிவேல்சாமி,இணைச் செயலாளர் விக்னேஷ்,பொருளாளர் சதீஷ்குமார்,முன்னாள் துணைத் தலைவர் மதியழகன்,வழக்கறிஞர் ஆரோக்கியசாமி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp