வந்தவாசி , ஏப் 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குளோபல் அபாகஸ் அகாடமி மாணவர்கள் பங்கேற்று யோகாசன விழிப்புணர்வில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஆசனங்களை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், நகராட்சி தூய்மை திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனி, நல்நூலகர் ஜா.தமீம், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் ஜி.விநாயக மூர்த்தி, ஆசிரியர் மகாவீர் ஆகியோர் பங்கேற்று கருத்துக்களை வழங்கினர். நிகழ்வில் யோகா விழிப்புணர்வு செய்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் அகாடமி ஆசிரியை ம.உஷா நன்றி கூறினார்.

More Stories
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆர் கதிரவன் நாளை காலை 10.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல்
வேட்பாளர் அறிமுகம்
வில்லியனூர் தொகுதி: ஜக்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி ரவிக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!