February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் மாணவி திரிஷலாஸ்ரீ சிறப்பு கட்டுரை

கோவை நவ:15
நாம் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் இந்த சிறப்பான நாளில்,சமூகப் பணியாளர்கள் அனைவரும் குழந்தைகளின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர வேண்டிய நேரம் இது.ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் குழந்தைகளின் கைகளில் இருக்கிறது. அவர்களின் நலன்,கல்வி, பாதுகாப்பு மற்றும் முழுமையான வளர்ச்சி ஆகியவை சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாகும் சமூகப் பணியாளர்களாகிய நாமெல்லோரும் குழந்தைகளின் உரிமைகளை காக்கவும்,அவர்களின் கனவுகளை நனவாக்க வழி செய்யவும், ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும் சமூகத்தை உருவாக்கவும் பாடுபட வேண்டும்.
குழந்தைகள் வளர்வதே நாட்டின் வளர்ச்சி என்பதனை நாம் மனதில் கொள்ளுவோம்

சமூகப் பணியாளர் என்பவர் தனது வாழ்வையும் உழைப்பையும் தனக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் இந்த சமூகம் முன்னேற்றம் அடைவதற்கும் விழிப்புணர்வு அடைவதற்கும் பொது நலத்திற்காக பயன்படுத்துவார்கள்,அதிலும் குறிப்பாக தனது சமூக செயற்பாட்டை குழந்தைகள் நலனுக்காக பயன்படுத்துவது என்பது அறிய மிகப்பெரிய செயலாகும். அதிலும், குறிப்பிடத்தக்கவைகளாக சிலவற்றை தேர்ந்தெடுத்து கட்டுரையாக சமர்ப்பிக்கின்றேன்

குழந்தைத் தொழிலாளர்களை அறவே ஒழிப்பதற்கு, எந்தக்குழந்தையும் தொழிலில் ஈடுபடாமல் கல்வி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியுடன் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு சமூகமாக இணைந்து செயல்படுவது நமது கடமை.

குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்
களை கண்டறிந்து குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதோடு நில்லாமல் எப்போதும் இம்மாதிரியான குற்றச் செயல்கள் நடைபெறா வண்ணம் விழிப்புணர்வு அடைவதற்கு “Bad touch Good touch’பற்றிய விபரங்களை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமாக கற்பித்தல் செய்வதற்கு பிரச்சாரம் செய்வது.குழந்தைகள் தங்களது வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுத்து சமூகத்தில் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு வழி வகுப்பது.பள்ளியில் கல்வி பயில இயலாத அல்லது கல்வி பயில வசதி இல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை அரசுக்கு தெரிவித்து அல்லது உயர்ந்த மனம் கொண்ட உதவும் குணம் கொண்ட நபர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களை கல்விப் பயில உதவுவது.தற்காலத்தில் செல்லிடை பேசியில் மூழ்கி எதிர்காலத்தை தொலைக்கும் குழந்தைகளை குறை சொல்லாமல் மகிழ்வான வார்த்தையால் மாற்றம் செய்திடுவது வரை சமூக சேவகர் குழந்தைகளின் உறவு தொடர்கிறது.

Facebook
YouTube
Instagram
WhatsApp