February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஸ்ரீ செல்வகணபதி மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

சேலம் மாவட்டம் பச்சப்பட்டி,ஸ்ரீ செல்வ கணபதி மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் நிறுவனர்,டாக்டர் வி.கே.பிரகாஷ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா பல்வேறு போட்டிகள் மற்றும் ஆடல்,பாடல் நிகழ்ச்சியுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட நடிகரும்,நீதி கதிர் காலை நாளிதளின் சேலம் மாவட்ட செய்தியாளர் துருவன் நரேஷ்,நீதி கதிர் எக்ஸ்பிரஸ் காலை நாளிதழின் சேலம் மாவட்ட புகைப்பட நிருபர் சுகுமார்,கோவை சுந்தரம், சிறந்த சாதனையாளருக்கான விருதைப் பெற்ற திருமதி வி.கோமதி சசிகுமார் போன்றோர் விழாவில் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்டதை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் மத்தியில் சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்வானது இந்து,முஸ்லிம் கிறிஸ்டின் என அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு ஒற்றுமையுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடி உண்டு மகிழ்ந்தனர்.

மேலும் இவ்விழாவில் சிறந்த செய்தியாளர் துருவன் நரேஷ் மற்றும் சிறந்த புகைப்பட நிருபர் சுகுமார் போன்றோருக்கு கேடயத்தை நிறுவனத் தலைவர், சமூக சேவகர் டாக்டர் வி.கே.பிரகாஷ் வழங்கி கௌரவித்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp