வந்தவாசி, டிச 15:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீமந் நாதமுனிகள் ஸ்ரீ வைஷ்ணவ சபை மற்றும் ஸ்ரீ ராம பஜனை மந்திர கைங்கரிய டிரஸ்ட் இணைந்து நடத்திய சிறப்பு ஸ்ரீ வைஷ்ணவ மாநாடு ஆரணி ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வு பெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் எஸ்.குமார், விமலா ஜுவல்லரி எஸ்.பரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க நிகழ்வாக,
ஸ்ரீ கிருஷ்ண லீலாமிர்த பஜனை குழு சார்பில் திருநாம சங்கீர்த்தனம் பஜனை நிகழ்வு நடைபெற்றது. பிறகு வள்ளியூர் ஸ்ரீ வைஷ்ணவ நாட்டியாலயா பரத குழு சார்பில் பரத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில் கும்பகோணம் டாக்டர் உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் அவர்களால் ‘பால லீலையும், பாரத லீலையும்’ என்ற தலைப்பில் சிறப்பு உபன்யாசம் (சொற்பொழிவு) நடைபெற்றது. இந்த வைபவத்தில் வந்தவாசி வட்டாட்சியர் சம்பத் குமார், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி தலைவர் மு.ரமணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 750 க்கும் மேற்பட்ட பாகவத கோஷ்டிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
வந்தவாசியில் ஸ்ரீ வைணவ மாநாடு: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!