செஞ்சி மார்01
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியத்தில் மறந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் முன்னிட்டு மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் ஈயக்குணம் முரளி,அவர்களின் ஏற்பாட்டில் 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவி ஈயக்குணம் ஊராட்சியில் நடைபெற்ற வந்த நிலையில் இன்று
மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ், அவர்களில் வழிகாட்டத்தின் பேரில்
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேல்மலையனூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டி மேல்மலையனூர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
பின்னர்
மேல்மலையனூர் தெற்கு எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் ஈயக்குணம் முரளி அவர்களின் ஏற்பாட்டில்1000 நபர்களுக்கு அன்னதானம், வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேல்மலையனூர் ஒன்றிய இணை செயலாளர் தனசேகர், ஒன்றிய வரதகரணி செயலாளர் காசி பாலாஜி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராமச்சந்திரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜதுரை, ராஜேஷ், பெருமாள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
இ.எஸ் . கல்வியில் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா
7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!