April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு..

ஈரோட்டில் புரட்சிகர இளைஞர் முன்னணி அறிவிப்பு..

ஈரோடு. ஏப்ரல்.04

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தங்களின் ஆதரவை இந்த தேர்தலில் வழங்குவதாக புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொது தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அதிமுக பாஜக தலைமையிலான இந்தியா கூட்டணியும் களத்தில் உள்ளது.

மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண்கின்றன.

இந்த நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர், பாஜக அரசின் மதம் சார்ந்த அரசியலையும், அதற்கு துணை நிற்கும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்தும், அவர்களுக்கு எதிராக தமிழக வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென கேட்டும், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தங்களின் ஆதரவுகளை அனைத்து தொகுதிகளிலும் வழங்குவதாகவும் பிரித்திகரை இளைஞர் முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் மதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்த அறிவிப்பை அவர்கள் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டனர்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள், ஈரோடு மாநகர மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணி செயலாளர் செயப்பிரகாசம், கோவை மாநகர ஒருங்கிணைப்பாளர், மலரவன், காங்கேயம் நகரம் ஒருங்கிணைப்பாளர் பெண்கள் பிரிவு கனிமொழி, திருப்பூர் புறநகர செயலாளர் கவி, பள்ளிபாளையம் நகர செயலாளர் மாணிக்கம், உள்ளிட்ட புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp