June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பேப்பர் செய்தி

அறந்தாங்கி ஜூன் 22
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா
மேற்பனைக்காடு
கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளியில்
சர்வதேச யோகா தினம் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 95வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு மாபெரும் முழுமையான கண் சிகிச்சை முகாம்
நடைபெற்றது
முகாமில் மருத்துவர்கள்
செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மிகச் சிறப்பாக தொடங்கி நடைபெற்றது

மருத்துவ முகாம் நிகழ்வினை அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுமதி இளைஞர்களின் எழுச்சி நாயகன் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்வை தொடங்கி வைத்தார். முகாமிற்கு வருகை தந்த மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மாணவர்கள் அப்துல் கலாம் அய்யாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி கலாம் ஐயாவின் பிறந்த நாள் விழாவை சிறப்பித்தனர்.

முகாமில் ஒருங்கிணைப்பாளர் .காசி, மருத்துவர் பாண்டித்துரை, கணித ஆசிரியர் முத்துச்சாமி, மேற்பனைக்காடு
கூ.ப.சிதம்பரம் .கண்ணன், சமூக செயல்பாட்டாளர் முகமது மூஸா, ஸ்ரீ விஸ்வகர்ம பஞ்சபிரம்ம அறக்கட்டளை பொறுப்பாளர்கள்
மறமடக்கி வடிவேல், குலமங்கலம்
சுப்பையா மற்றும் தன்னார்வலர் பொறியாளர் சர்வம் சரவணன் மற்றும் 2k கிட்ஸ் பாரதி பட்டறை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.