வேட்பாளர் தோப்பு என். டி வெங்கடாசலம் வெற்றி பெறுவார் என தொண்டர்கள் முழக்கம்..
ஈரோடு. ஏப்ரல். 01

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தோப்பு என். டி வெங்கடாஜலத்தை ஆதரித்து தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் 2026 இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.
இதில் திமுக கூட்டணி சார்பிலும், அதிமுக கூட்டணி சார்பிலும், தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர், ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளர் தோப்பு என் டி வெங்கடாசலம் போட்டிருக்கிறார்.
இவரை ஆதரித்து திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
தொடர்ந்து இந்த தேர்தல் பிரச்சாரம் களப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வேட்பாளர் தோப்பு என் டி வெங்கடாசலம், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் நாம் வெற்றி பெற்று, வெற்றிக்கனியை தலைவர் தளபதியிடம் வழங்க வேண்டும்.
இதற்காக திமுகவை சேர்ந்த தொண்டர்களும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் தீவிரமாக களப்பணிகள் செய்ய வேண்டும். வெற்றி ஒன்றே குறிக்கோள் என நம்முடைய செயல்பாடு நிச்சயம் நமக்கு வெற்றியைத் தரும் என்று.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More Stories
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆர் கதிரவன் நாளை காலை 10.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல்
100 சதவீதம் வாக்களிப்போம்: விழிப்புணர்வு யோகாசனம்
வேட்பாளர் அறிமுகம்