June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசியில் கோரைப் பாய் நெசவு பூங்கா: துணை முதல்வர் பரப்புரையில் பேச்சு

வந்தவாசி, ஏப் 01:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அம்பேத்குமாரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க பரப்புரை நிகழ்த்தினார். இந்த நிகழ்விற்கு ஆரணி எம்பி எம்.எஸ். தரணி வேந்தன் தலைமை தாங்கினார். இந்த பரப்புரையில் வந்தவாசியில் கோரைப் பாய் நெசவு பூங்கா அமைக்க திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் வழிவகை செய்யப்படும் என்று வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தின் தன்மானத்தை மீட்க, தமிழகத்தின் நிதியை மீட்க, தமிழகத்தை மீட்க மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடர வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் அம்பேத்குமாருக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். இந்த பரப்புரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.