July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புனித பிரான்சிஸ் சவேரியார் அருள் தலம் ஆண்டு திருவிழாகொடியேற்றத்துடன் தொடக்கம்!

புதுச்சேரி, ஜூலை 6:

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் அருள் தலம் ஆண்டு திருவிழா நேற்று சிறப்பாக தொடங்கியது.

இதனை முன்னிட்டு, ஜூலை 5ஆம் தேதி மாலை 6.00 மணியளவில் திருப்பலி மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது.

பங்குத் தந்தையார் தலைமையில் நடைபெற்ற திருப்பலிக்குப் பிறகு, திருவிழா கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டனர்.

கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன.