April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி பொருத்தவரை கட்சிக்கும் சின்னத்துக்கும் ஓட்டு கிடையாது… வேட்பாளரை பொருத்தே ஓட்டு விழும்

புதுச்சேரி தேங்காய்த்திட்டு வன்னிய முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
மதிப்புக்கு மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் திரு வைத்திலிங்கம் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கு சீட்டு கிடையாது என்று ஒரு நாடகத்தை அரங்கேற்று உள்ளீர்கள் ஏனென்றால் அவரை முன்னிறுத்தினால் வெற்றி பெற முடியாது எனவே அவரை புறக்கணிப்பது போல் ஒரு நாடகம் அரங்கேறி உள்ளது மற்றும் மாண்புமிகு முதலமைச்சர் திரு ரங்கசாமி அவர்கள் போட்டியிடும் தொகுதியில் ஒன்றான தட்டாஞ்சாவடி தொகுதியில் வேற்றுமண் தாக்கல் செய்து உள்ளீர்கள் புதுவை மக்களை திசை திருப்பி உள்ளீர்கள் மதிப்பிற்குரிய திரு நாராயணசாமி அவர்களை மக்கள் ஏற்கவில்லை என்று இரண்டு முறை நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் நம்பளை மக்கள் ஏற்றுக் கொள்கிறார் என்று எண்ணத்தில் இறங்கி உள்ளீர்கள் இது முற்றிலும் தவறு பாராளுமன்றம் தேர்தல் வேற சட்டமன்றத் தேர்தல் வேற பாராளுமன்றம் தேர்தல் முழுக்க முழுக்க தேசிய தலைவர்களை பொறுத்து உள்ளது அதாவது மதிப்புக்குரிய திரு ராகுல் காந்தி அவர்களின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் ஏனென்றால் திரு முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்கள் புதுச்சேரி மக்கள் மீது அன்பு வைத்திருந்தார் தனி கவனம் செலுத்தி இருந்தால் அதனால் அவர் மகனான திரு ராகுல் காந்தி அவர்கள் புதுச்சேரி மக்கள் தொடர்ந்து இரண்டு முறை வாய்ப்பு தந்துள்ளார் இதை தவறாக புரிந்து கொண்டு நமக்குத் தான் மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளார்கள் என்று மனக்கணக்கு போட்டு உள்ளீர்கள் நீங்களும் சரி புதுச்சேரி முதலமைச்சர் திரு ரங்கசாமி அவர்களும் சரி புதுச்சேரி பொருத்தவரையிலும் மக்கள் கருணை உள்ள மக்கள் யாரிடம் அன்பு பாசம் மக்களுக்காக பாடுபடுகிறார்களோ வேலை செய்கிறார்களோ என்று புரிந்து கட்சிக்கு ஓட்டு கிடையாது இங்கு ஆளுக்கு மட்டும் தான் ஓட்டு இதை புரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் நீங்கள் இருவரும் கற்பனையில் வாழ்கிறீர்கள் எங்கள் தலைமைக்குத்தான் ஓட்டு என்று பாராளுமன்றம் தேர்தல் வரும் முன்பே புதுவை முழுவதும் குடும்ப அட்டைக்கு 5000 ரூபாய் வழங்கினார் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் ஏன் பாராளுமன்றத்தில் தோல்வி தழுவினார் புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் அனுதாபம் அன்பு காட்டும் மனிதர்கள் இருக்கும் இடத்தில் தான் மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்து வரும் நபருக்கு தான் ஓட்டு தெளிவாக உள்ளார்கள் இப்பொழுது கூடம் உங்கள் கூட்டணி கட்சியில் காலாப்பட்டு தொகுதியில் திரு செந்தில் அவர்கள் மக்களை சந்திக்க உள்ளார் போன முறை தோல்வி தழுவி உள்ளார் ஆனால் அந்த மக்கள் போன முறை அந்தப் பிள்ளையை தோற்கடித்து விட்டோம் இந்த முறையாவது வாய்ப்பு கொடுப்போம் என்று வெற்றி பெற செய்வார்கள் அது உங்களால் இல்லை அனுதாபம் அவர்கள் செய்யும் அணுகுமுறை மற்றும் அரியாங்குப்பத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஜெயமூர்த்தி அவர்கள் துணைவியார் வாய்ப்பு கொடுத்து உள்ளீர்கள் அவர் இரண்டு வருடமாக பணியாற்றி கொண்டு வந்திருக்கிறார் அவர் முகத்தை பார்க்கவே வருதாவும் ஆக கஷ்டமாக உள்ளது அவருக்கு தொகுதி மக்கள் அனுதாபம் ஒரு பெண் வெளியே வருவது கடினம் இந்த அளவுக்கு மக்கள் இடையே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் அந்த கஷ்டம் மக்கள் மனதை தொட்டுவிடும் இப்படி தான் புதுச்சேரி மக்கள் வேட்பாளர் மீது பாவப்பட்டு கஷ்டப்பட்டு அடிதாயி வாக்களிப்பார்கள் இதுதான் புதுச்சேரி மக்களின் நிலை அது மட்டுமல்லாமல் உழவர் கரை தொகுதி சரவணன் சொந்த ஊருக்கார் அவருக்கு சீட்டு இல்லை கதிர்காமம் தொகுதி வெகு நாளாக வேலை செய்து கொண்டிருக்கும் அழகு என்ற அழகானந்தம் இது போன்ற மனிதர்களை அந்தந்த தொகுதி மக்கள் அவர்களைப் பார்த்து சூழ்நிலையும் வருந்துவதை நினைத்து தான் மற்ற தொகுதிகளிலும் அனைத்து தொகுதிகளிலும் புதுச்சேரி மக்கள் வாக்களிக்கின்றார்கள் இதுதான் ஆணித்தனமான உண்மை அதுமட்டுமில்லாமல் காரைக்காலில் நெடுங்காடு தொகுதியில் திரு சந்திர பிரியங்கா மற்றும் திருபுவனை தொகுதியும் திரு கோபிகா அவர்கள் பெண்கள் கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடைய வேண்டும் இன்று பாடுபட்டு மக்களிடையே சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் இது போன்று தான் புதுச்சேரி மக்கள் கஷ்டப்படுபவர்கள் மக்களுக்காக உழைப்பவர்கள் அன்பு காட்டுபவர்கள் கஷ்டத்தில் உள்ளவர்கள் தோல்வி கண்டவர்களை மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் புதிதாக நிற்கும் மனிதர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று நினைத்து தான் வாய்ப்பு தருவார்கள் அதை விட்டுவிட்டு எங்களுக்கு தான் எங்கள் தலைமைக்கு தான் புதுச்சேரி மக்கள் வாய்ப்பு தருவார்கள் என்று நினைக்கக் கூடாது இந்த நிலையில் பாதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் திரு வைத்தியலிங்கம் அவர்களே புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படிக்கு

K.லிங்கசாமி
தலைவர்,
வன்னிய முன்னேற்ற இயக்கம்,
புதுச்சேரி.

Facebook
YouTube
Instagram
WhatsApp