புதுச்சேரி, ஜூன் 24:
புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளின் பயன்பாட்டிற்காக நாப்கின் தானியங்கி இயந்திரம் இன்று (ஜூன் 24) திறந்து வைக்கப்பட்டது.

பள்ளியில் பயிலும் ஏழை மற்றும் எளிய மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகளின் நிதி உதவியுடன், இந்த நாப்கின் வழங்கும் இயந்திரம் பள்ளியின் நூலகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் அழகு (எ) அழகானந்தம் தலைமை தாங்கி, இயந்திரத்தை இயக்கி வைத்தார்.இதில் பள்ளி முதல்வர் டாக்டர் மோகன் பிரசாத் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த இயந்திரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், மாணவிகள் இரண்டு ரூபாய் நாணயத்தைச் செலுத்தி,மிக எளிதாக ஒரு நாப்கினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஏழை மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது