April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பத்திரிக்கை செய்தி..

நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகள் சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் திரு ஓம் சக்தி சேகர் அவர்கள் இன்று 30-3-26 திங்கள்கிழமை தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர் வார்டு DR நகர், திருமால் நகர், ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று பலாப்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பளித்தனர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை திரு ஓம் சக்தி சேகர் அவர்களிடம் முன்வைத்தனர். அப்போது அவர்களிடம் பேசிய இது ஓம் சக்தி சேகர் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் நமது தொகுதி மிகவும் பின்தங்கி போய் உள்ளது. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 2006 முதல் 2016 வரை இந்த பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொண்டேன். சுத்தமான குடிநீர் கிடைக்க அண்ணா நகர் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துக் கொடுத்தேன். டி ஆர் நகர் பகுதியில் அனைத்து சாலைகளையும் சிமெண்ட் சாலையாக மாற்றி கொடுத்தேன். திருமால் நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை மேற்கொண்டேன். திருமால் நகரில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியிலேயே கோயில் வேண்டும் என்று கேட்டு அதற்கு பிரச்சினை வந்தபோது கோயில் திருமால் நகரில் இருக்க உங்களோடு சேர்ந்து நடவடிக்கை எடுத்தேன். திருமால் நகர் மற்றும் டி ஆர் நகர் முழுவதும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். என்னை வாக்களித்து வெற்றி பெற செய்த நெல்லித்தோப்பு தொகுதி மக்களின் நலன் ஒன்றை குறிக்கோளாக பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் செயல்படுவேன். இவ்வாறு அண்ணன் ஓம் சக்தி சேகர் அவர்கள் பேசினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp