August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஓணம் பண்டிகை ஒட்டி 3,000 வேட்டிகளால் உருவான பிரம்மாண்ட பூக்களம்: ‘ராம்ராஜ் காட்டன்’ புதிய ஆசிய சாதனை!!!

திருப்பூர்,ஆக-23
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான ‘ராம்ராஜ் காட்டன்’ 3,000 வேட்டிகளைப் பயன்படுத்தி ஆசியாவின் மிகப்பெரிய பூக்களத்தை (முண்டுக்களம்) உருவாக்கி ‘ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
​கேரளாவின் பாரம்பரிய ஓணம் பண்டிகையின் அடையாளமான அத்தப்பூக் கோலத்தையும், தமிழர்களின் கலாச்சார அடையாளமான வேட்டியையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கொச்சியில் உள்ள தனியார் மாலில் 30 அடி விட்டத்தில் இந்த பிரம்மாண்ட முண்டுக்களம் வடிவமைக்கப்பட்டது.
​இதற்கான சாதனைச் சான்றிதழ் மற்றும் விருதினை, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நடுவர் சஞ்சய் போலா, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் நாகராஜன் அவர்களிடம் வழங்கிக் கௌரவித்தார்.
​இது குறித்து ராம்ராஜ் காட்டன் தலைவர் நாகராஜன் தெரிவித்ததாவது:
​”எங்களைப் பொறுத்தவரை வேட்டி என்பது வெறும் ஆடை மட்டுமல்ல; நமது கலாச்சாரத்தின் ஓர் அங்கம். இந்த ஓணம் பண்டிகையில் அந்தத் தொடர்பை மக்கள் நினைவில் கொள்ளும் வகையில் 3,000 வேட்டிகளால் இக்களத்தை உருவாக்கினோம். கலாச்சாரத்தை இன்றைய தலைமுறைக்கு புதுமையான வடிவில் கொண்டு சேர்த்ததில் பெருமிதம் கொள்கிறோம்.”
​பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைத்து நிகழ்த்தப்பட்டுள்ள இந்தச் சாதனை பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.