April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கிராம பழங்குடி இன மாணவ மாணவர்களுக்கு கல்வி உதவி…

ஈரோடு தயா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் நேரில் சென்று வழங்கினார்…

ஈரோடு. மார்ச். 15

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினர் இன மக்களின் குழந்தைகளுக்கு ஈரோடு தயா அறக்கட்டளையின் சார்பில் கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் மலை கிராம பகுதிகளில் வசித்து வரும் மலை கிராம பழங்குடியினர் இன மக்களின் குழந்தைகளுக்கு, ஈரோடு தயா அறக்கட்டளை மற்றும் ராசாத்தி அம்மாள் கல்வி அறக்கட்டளை மூலமாக மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மக்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கல்வி நல திட்ட உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களான, தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும், அதேபோல் பர்கூர் வனப்பகுதிகளுக்கு உட்பட்ட மிக உயரத்தில் இருக்கும் கத்திரி மலை போன்ற பல்வேறு மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மக்களின் பிள்ளைகளுக்கு, ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலம் இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கு பல்வேறு உதவிகளை சிறப்பாக செய்து வருகின்றது.

இதுபோன்று மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் குழந்தைகள் படிக்கும் வழி மாவட்டங்களுக்கும் இத்தகைய கல்வி உதவிகளை செய்ய, கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம், நம்பியம் பட்டு ஊராட்சி, கோவிலான் டூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் மலை கிராம மலைவாழ் பழங்குடியினர் இன மாணவ, மாணவிகளுக்கும் ஈரோடு தயா அறக்கட்டளை மற்றும் ராசாத்தி அம்மாள் கல்வி அறக்கட்டளையின் சார்பில், இந்த அறக்கட்டளைகளின் நிறுவனத் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் தலைமையில் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஜவ்வாது மலை பகுதிகளுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உதவிகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார்கள்.

இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு தயா அறக்கட்டளை மற்றும் ராசாத்தி அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் டாக்டர் என் எம் பிரதீப் சிறப்பாக செய்திருந்தார்.

இந்தக் கல்வி உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மலைவாழ் பழங்குடியினர் இன மக்களும் திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கோட்டையினர் நலத்துறை அதிகாரிகளும், கல்வி அலுவலர்களும் நன்றி கூறி பாராட்டு தெரிவித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp