February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பூரில் 3 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள் மாயம்.கலெக்டர் அலுவலகத்தில், ஐ.யூ.எம்.எல். புகார்

நவம்பர் 20

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியி ருப்பதாவது:வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் திருப்பூர் சட்டமன்ற தொகுதியாக இருந்த பகுதிகள் தற்போது திருப்பூர் தெற்கு,வடக்கு மற்றும் பல்லடம் என 3 தொகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளன.இந்நிலையில் கடந்த 2001 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2001 உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்களித் தவர்களின் பெயர்கள் 2002 திருத்தப்பட்டியலில் இல் லாத நிலையில் அவ்வாறு விடுபட்டவர்கள் உரிய ஆதாரங்களை, கொடுத்து தங்கள் பெயர்களை பட் டியலில் சேர்த்து தேர்தல்க ளில் வாக்குரிமை செலுத்திவந்தனர்.
தற்போது சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது 2002-ம்ஆண்டு திருத்த பட்டியலின்படி நிர்ணயம் செய்துள்ளதால், மூன்று லும் சுமார் 20 ஆயிரத்துக்கு அதிகமான சிறுபான்மை சமுதாய மக்களின் வாக்கு கள் மற்றும் மற்ற மதத்தை சேர்ந்த வாக்காளர்கள் என சுமார் 50 ஆயிரம் வாக்கு கள் மாயமாகி உள்ளது. சட்டமன்றத் தொகுதிகளி
எனவே இதுபோன்ற வாக்காளர்களுக்கு மாற்று வழிகளை பரிசீலனைசெய்ய வேண்டும். வாக் காளர் பட்டியல் வழங் கும் (பிஎல்ஓ) வாக்குச்சா வடி நிலை அலுவலர்கள் உடனே படிவங்களை தருமாறு அவசரப்படுத்து கிறார்கள். அவர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப் படவில்லை என்பதால் விண்ணப்பங்கள் தவறாக பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற் கொள்ளும் பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Facebook
YouTube
Instagram
WhatsApp