April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,29/03/2026.

சேலத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்- வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று பயிற்சி.

சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும்,கலெக்டருமான பிருந்தாதேவி கூறியதாவது;சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள 3,468 வாக்குச்சாவடிகளில் 16,648 அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ளனர்.

இந்த அலுவலர் களுக்கு பயிற்சிகளானது நேற்று (28ம் தேதி)சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களில் நடக்கிறது.கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு தேவியாக்குறிச்சி பாரதியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு மேட்டுப்பட்டி, சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலும், ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு கருப்பூர் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு மாதையன்குட்டை எம்.ஏ.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு கொங்கணாபுரம் ஏ.ஜி.என் மேல்நிலைப்பள்ளியிலும், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு சங்ககிரி சண்முகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு சேலம் சோனா கலை அறிவியல் கல்லூரியிலும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு சேலம் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு அம்மாபேட்டை ஸ்ரீ சக்திகைலாஸ் மகளிர் கல்லூரியிலும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு கடத்தூர் அக்ரஹாரம் அரசு சட்ட கல்லூரியிலும் என 11 மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சிகள் நடக்கிறது. ஒவ்வொரு பயிற்சி மையங்களிலும் 1200 முதல் 1500 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மூன்று கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp