தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது இதற்கான மனு தாக்கல் நாளை மறுநாள் 30 ஆம் தேதி தொடங்க உள்ளன இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது அதன்படி செஞ்சி தொகுதிக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள்செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தேர்தல் வகுப்பில் பங்கேற்றுச் சென்ற ஆசிரியர்களிடம் திமுக சார்பில் ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான்,பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் நகர செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட திமுகநிர்வாகிகள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரத்தனர்.
இதில் நிர்வாகிகள்நெடுஞ்செழியன், ஜான் பாஷா, மோகன், பொன்னம்பலம், சங்கர் ,ஜே .எஸ். சர்தார், தொண்டரணி பாஷா, மாணவரணி வினோத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் ராமு,ஹாஜி,ஷரீப்,சந்திரன், பாபு, தாஜ்,பன்னீர் கமிட்டி சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..