April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வழக்கறிஞர் அணி சார்பில்விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சிமஸ்தான் எம்.எல்.ஏகலந்துகொண்டு அன்னை தெரேசா ஆதரவற்ற முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும்,இளம் வழக்கறிஞர்களுக்குசட்டப் புத்தகம் மற்றும் இனிப்பு வழங்கினார்.

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவதுபிறந்தநாள்விழாவை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அணி சார்பில்அன்னை தெரேசா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.

அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் ,
மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில்விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சிமஸ்தான்எம் எல் ஏ கலந்து கொண்டு ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகளையும் ,இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி சட்ட புத்தகத்தை வழங்கி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில்மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பார் அசோசியேசன் சங்கத் தலைவர் பிரவீன், சங்க செயலாளர் அசாருதீன்,
அரசு வழக்கறிஞர் தமிழ் செல்வி கர்ணன்,,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுதாகரன்,மூத்த வழக்கறிஞர்கள் அரிகிருஷ்ணன், மழை மேனி பாண்டியன்,முருகன் மணிகண்டன், வீரப்பாண்டியன்,ஜெயக்குமார், நந்தினி, பத்மா, கலை, உத்தரவேலு, ராஜா, ர.,அரவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp