கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தினகரன் தாலுகா நிருபர் அன்பரசு அவர்கள் சமீபத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் கடுமையாக காயமடைந்து, மூளைச் சாவு அடைந்தார். மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
இந்நிலையில், செய்தியாளர்
N. அன்பரசு அவர்களின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (18.03.2026) காலை சுமார் 8.00 மணி அளவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார், இ.ஆ.ப. அவர்கள் அன்பரசு அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அன்பரசு அவர்களின் தன்னலமற்ற உடல் உறுப்பு தானம் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election