நல திட்ட உதவிகள் வழங்கி சமபந்தி விருந்தும் நடைபெற்றது..
ஈரோடு. டிச. 07
ஈரோட்டில் நேற்று நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள்.
அதேபோல் ஈரோடு மாவட்டம் நந்தா பொறியியல் கல்லூரியில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் விழா ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பிலும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் ஏழைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பல்வேறு திட்டங்களில் கீழ் நூற்றுக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு அறுசுவை உணவுடன் கூடிய சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இந்த சமபந்தி விருந்தில் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி, ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து சமபந்தி விருந்தில் வழங்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அமைச்சர் சு. முத்துசாமி மற்றும் ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சி சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி. செல்வராஜ் மாவட்ட வருவாய் அலுவலர், சு. சாந்தகுமார் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அரபித் ஜெயின், மாவட்ட கூடுதல் ஆட்சியர( பயிற்சி) காஞ்சன் சவுத்ரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.,

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!