சங்கராபுரம் டிச 08
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிழக்கு ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் முகவர்கள் பயிற்சி பட்டறை மற்றும் கிளை நிர்வாகிகள் கூட்டம் மூரார்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்துரு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் பணித் திட்டங்கள், வீடு–வீடாக சென்று வாக்காளர் தொடர்பு வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கை அதிகரிப்பு, மற்றும் ஒவ்வொரு பூத் மட்டத்திலும் கட்டமைப்பு வலுப்படுத்துதல் போன்ற முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ராமு சிறப்புரையாற்றி, கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்கினார். மாவட்ட இணைச் செயலாளர் கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஜவகர் ஆகியோரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.
மேலும் வழக்கறிஞர் பிரிவு குணதீபன், சங்கராபுரம் நகரச் செயலாளர் கோவிந்தராஜ், நகர இணைச் செயலாளர் குமரேசன், ஒன்றிய இணைச் செயலாளர் பிரபு, பொருளாளர் டென்னிஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, ஒன்றிய மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
வேல்முருகன் அண்ணாவின் ஆதரவினால்தான் நாங்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிந்தது. அவர் செய்த உதவி ஒரு சில நிமிடங்களுக்கானதல்ல — அது எங்களின் முழு எதிர்காலத்தையே மாற்றி அமைத்தது.
வேல்முருகன் அண்ணா, நீங்கள் எங்களுக்காக செய்த அனைத்திற்கும் நான் என்றும் நன்றியுணர்வுடன் இருப்பேன். பிறருக்கு உதவ வேண்டும் என்ற உங்கள் மனிதநேயமும் கருணையும் என்றும் நினைவில் நிற்கும்.
தமிழீழப் போராட்டத்தின் இறுதி கட்டத்தில், சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான நிரபராத தமிழர்கள் — குழந்தைகள், முதியோர், சமூக தலைவர்கள், நமது குடும்பத்தினரும் உட்பட — சிக்கி அளவிட முடியாத துன்பங்களை அனுபவித்தனர். பின்னர் அவர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பித்து வந்தபோது, நமது தமிழ் நாடு தொப்புள் கொடி உறவுகள் பல வகையில் எங்களுக்கு உதவினர்.
இன்று, மிகுந்த வேதனையுடனும் மரியாதையுடனும் நன்றியுடனும், அந்தக் கடினமான காலங்களில் எங்களுக்கு துணை நின்ற நமது தமிழ் நாடு தொப்புள் கொடி உறவுகளை நாம் நினைவுகூர்கிறோம்.
இந்த வலியூட்டும் வரலாற்றுப் பக்கம் எங்களால் ஒருபோதும் மறக்க முடியாத ஒன்று. இன்று கூட, முள்ளிவாய்க்காலில் மரணத்திலிருந்து தப்பித்து வந்த பலரும் ஆஸ்திரேலியாவில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல நிலைகளில் கௌரவமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் உழைப்பாலும் விடாமுயற்சியாலும் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் கருணையும் தாராள மனப்பான்மையும், குறிப்பாக வேல்முருகன் அண்ணாவும் அவரது குழுவும் வழங்கிய ஆதரவும், பல தமிழ் குடும்பங்களுக்கு இந்நாட்டில் பாதுகாப்பும் புதிய வாழ்க்கையும் கிடைக்கச் செய்த முக்கிய காரணங்களாகும். பல ஆண்டுகளாக அவர் தமிழ் குடும்பங்கள் அமைதியாக குடியேற தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறார்.
வேல்முருகன் அண்ணாவும் அவரது குழுவும் கடும் துன்பங்களை எதிர்கொண்ட மக்களுக்கு உதவுவதை ஒருபோதும் நிறுத்தியதில்லை. உணவு, தங்குமிடம், மருத்துவ உதவி, பொருளாதார உதவி என்று எல்லா வகையிலும் அவர்கள் தமிழ் குடும்பங்களுக்கு துணை நின்றுள்ளனர்.
இந்த நிகழ்வை ஏற்படுத்தியவர்களுக்கு நன்றியும் வணக்கமும்!
என்னால் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். அன்றய கால கட்டதில் தமிழக பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் எங்களுக்கு யாரும் உதவி செய்ய பயந்து ஒதுங்கி நின்ற நேரத்தில் தொப்புள் கொடி உறவினால் கட்டுண்டு நின்று எங்களை காத்த வேல்முருகன் அண்ணாவும் அவரது சகோதரருக்கும் வேல்முருகன் அண்ணாவின் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அவர்களின் சேவைகளை வெறும் நன்றிகளில் அடக்கி விட முடியாது ஆயினும் அவர்கள் நீடூழி வாழவும் அவர் பணி சிறப்புற்று அவருடைய இலட்சியத்தில் மென்மேலும் மேன்மை பெறவும் இயற்கையின் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!