எஸ்.ஐ.பி.,அபாகஸ் சார்பில் பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்த மண்டல அளவிலான அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் பரிசுகளை வழங்கினார்.
சென்னை தலைமை இடமாக கொண்டு இந்தியா முழுவதும் 23 மாநிலங்களில் 1,050 மேற்பட்ட பயிற்சி மையங்களின் எஸ்.ஐ.பி., அபாஸ், மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான மண்டல அளவிலான அபாகஸ் போட்டி நேற்று புதுச்சேரி அடுத்துள்ள பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
இப்போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1,500 மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டு சுற்றுகளாக நடந்த போட்டியில் மொத்தம் 700 மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், எஸ்.ஐ.பி.,அபாகசின் தலைமை அதிகாரி சஞ்ஜிவ் மேனன், மாநில தலைவர் ரவிசங்கர், முகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை வினோத், சற்குணன் மற்றும் அவர்களது அணியினர் செய்திருந்தனர்.
எஸ்.ஐ.பி.,அபாகஸ்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!