புதுச்சேரி:
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி மாநில கழக இணை செயலாளர் (மேற்கு) முனைவர் லாவண்யா அவர்கள், புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தனது தொகுதிக்குட்பட்ட மூலகுளம் பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலையையும் அலங்கரித்து, முனைவர் லாவண்யா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
எம்.ஜி.ஆரின் புகழைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழாவில், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!