April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உருளையன்பேட்டையில் பாஜக மதன் ஏற்பாட்டில் எழுச்சியான தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்: மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

புதுச்சேரி:

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில வர்த்தகப் பிரிவு இணை அமைப்பாளர் மதன் ஏற்பாட்டில், மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மற்றும் மகளிர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு உருளையன்பேட்டை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மூர்த்தி மற்றும் தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்பாளரும், மாநில ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு தலைவருமான சாய் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்துகொண்ட வில்லியனூர் மாவட்ட பொறுப்பாளர் வெற்றி செல்வம் மற்றும் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு அமைப்பாளர் RS கண்ணன் ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விரிவாகச் சிறப்புரையாற்றினர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மதன் அவர்களின் தலைமையில் தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்களுக்குப் புடவைகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்:
மகளிர் அணி: மாநிலச் செயலாளர் கீதா, OBC அணி அகிலா, மாவட்ட பொதுச் செயலாளர் பிரியா, தொகுதித் தலைவி இலக்கியா.
தொகுதி நிர்வாகிகள்: பொதுச் செயலாளர் ராபர்ட், துணைத் தலைவர் விஜய் பாஸ்கர், செயலாளர் கார்த்திக்.
மாவட்ட & அணி நிர்வாகிகள்: அறிவுசார் பிரிவு அமைப்பாளர் அருள் பாலாஜி, பட்டியலின அணி துணைத் தலைவர் அசோக் (எ) மணிவண்ணன், OBC அணி பிரியா.
கிளை நிர்வாகிகள்: விநாயகம், முருகன், சதீஷ் உள்ளிட்ட கிளைத் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வெற்றிவேல், கணபதி, அபிராமன், சூர்யா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp