April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமிக்கு அமோக வரவேற்பு..

உரிமையோடு பேசி ஆதரவு தரும் தொகுதி மக்கள்..

ஈரோடு. ஏப்ரல். 02

ஈரோடு மேற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர் முத்துசாமிக்கு, தொகுதி மக்கள் அமோக வரவேற்பு வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கின்றது.

இந்த நிலையில் திமுக தலைமையில் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும், திமுக தெற்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் சு. முத்துசாமி தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த இரு தினங்களாக அவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவருக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து அன்போடு வரவேற்று தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நாளில் நேற்று 1 ஆம் தேதி காலை ஆறு முப்பது மணிக்கு தனது பிரச்சாரத்தை மேற்கொண்ட அமைச்சர் முத்துசாமி தொகுதிக்கு உட்பட்ட, பெரியார் நகர் பகுதி வார்டு 32 மற்றும் 33, ஜெகநாதபுரம் காலனி நேரு வீதி, அம்பேத்கர் நகர், காமராஜர் வீதி, மோகன் குமாரமங்கலம் வீதி, குமரன் மெயின் வீதி, மேற்கு அம்பேத்கர் வீதி, கண்ணகி வீதி, புதூர் வீதி, டீச்சர்ஸ் காலனி, கோவலன் வீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது அவருக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து அன்போடு வரவேற்று தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

இந்த பிரச்சாரத்தில் திமுக மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp