April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்…

258 மனுக்கள் வரப்பட்ட நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்தரவு..

ஈரோடு மார்ச்.03

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 258 மக்கள் வரப்பெற்றது. இந்த மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் வாரம் தோறும் திங்கட்கிழமை காலை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த மனுக்களில் இலவச வீட்டு மனை பட்டா, இலவச வீட்டு மனை, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை, அரசு வேலை வாய்ப்பு, கல்விக்கடன், மற்றும் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்தும் பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர்.

மேலும் காவல்துறை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டது.

258 மனுக்கள் வந்திருந்த நிலையில் மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டார்.

மேலும் இந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் கோட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்சக. சாந்தகுமார் மற்றும் தொடர்புடைய அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp