மேயர் அறையை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதம்..
ஈரோடு. பிப் 26
ஈரோடு மாநகராட்சி பெண் கவுன்சிலர் ஒருவர் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாநகராட்சி மேயர் அறையை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ள நிலையில், இதில் 42 வது வார்டு திமுகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் மேனகா என்பவர் கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரது வார்டு பகுதியில் வசித்து வரும் பொது மக்களிடம் ஏல சீட்டு மற்றும் தீபாவளி பலகார சீட்டு நடத்துவதாக கூறி சுமார் 50 பேரிடம் பணம் பெற்று அதனை முறையாக திருப்பி செலுத்தாததால் அவர் மீது ஏற்கனவே ஈரோடு ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட திமுக பெண் கவுன்சிலர் மேனகா, பிரச்சனை பெரிதானதால் வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி உள்ளதாக தெரிகிறது.
சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மேனகாவும் ஊரில் இல்லாத நிலையில், கொடுத்த பணமும் வராத நிலையில், தங்கள் முழுமையாக ஏமாற்ற பட்டு விட்டோம் என்ற ஆதங்கத்தில், ஏமாந்த பொதுமக்கள், அமைச்சரிடமும், மேயரிடமும் பல முறை நேரில் சென்று முறையிட்டே வந்துள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை முதலே மாநகராட்சி மேயர் அறை முன்பு கூட துவங்கினர். அலுவலகத்திற்கு மேயர் வந்தால் அவரிடம் மீண்டும் ஒரு முறை முறையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண எண்ணி மேயரின் அறை முன்பு பல மணி நேரம் காத்திருந்தனர்.
நேரம் ஆக ஆக பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் கூடியது. மேயர் வராத காரணித்த நாள் மேயர் அறை முன்பு அவர்கள் சூழ்ந்து கொண்டு, பணத்தை திரும்ப பெற்றுக் கொடுக்குமாறு சத்தமாக பேசத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து மேயரின் கணவரும், ஈரோடு மாநகர திமுக செயலாளர்ருமான சுப்பிரமணி என்பவர் அங்கு வந்து மேயர் அறையில் அமர்ந்து வந்திருந்த பொது மக்களை அழைத்து பிரச்சனை குறித்து பேசினார்.
அப்போதே அவர்கள் எங்களுக்கு பணம் திருப்பி தரப்பட வேண்டும். எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று அவரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
கோபத்துடன் குரல் எழுப்பிய பொதுமக்களை சமாதானம் செய்த மாநகர செயலாளர் சுப்பிரமணி, சற்று பொறுத்திருங்கள் விரைவில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலரின் குடும்பத்தினர் இடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று அவர் சமாதானம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து அரைகுறை மனசோடு பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
கோவையில்9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!!