ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் அறிவிப்பு.
புதுச்சேரி மக்களை ஏமாற்றும் அரசியல் வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளையும் மக்கள் விரோத ஆட்சியை நடத்தியவர்களுக்குசரியான பாடம் புகட்டுவதற்கும் , மக்களுக்கான ஒரு நல்ல ஆட்சியை ஏற்படுத்த தான் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தது. அதனை தொடர்ந்து கூட்டணியை மேலும் வலுப்படுத்த சசிகலாவின் தலைமையிலான அனைத்து இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், புதுவையில் செங்கோல் நீதி மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அகில இந்திய சிங்காரவேலர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து புதுவையில் வலுவான மக்கள் நல கூட்டணி உருவாக்கப் பட்டுள்ளது . இந்த மக்கள் நல கூட்டணியின் சார்பாக பதினேழு வேட்பாளர்களுடன் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கூட்டணி கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுகிறார்கள். ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களும் கூட்டணி கட்சிகளின் சின்னங்களில் போட்டியிடுகிறார்கள்.
எழுபது ஆண்டு காலமாக அரசியல் என்கிற போர்வையில் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த அரசியல் கட்சிகளையும் அரசியல் வியாபாரிகளையும் விரட்டியடித்து மக்களுக்கான ஒரு நல்ல ஆட்சியை உருவாக்க மக்கள் நல கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சின்னங்களில் வாக்களிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
மேலும் ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் விசுவாசிகள் அனைவரும் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து மக்கள் நல கூட்டணி ஆட்சி அமைக்க கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..