April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் *கழகத்தின் *மூன்றாவது அணியில்*

அகில இந்திய மஜிலீஸ் முஸ்லிம் கட்சி கூட்டணியில் இணைந்தது.!!!.

புதுச்சேரி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், புதுவையில் மக்களுக்கான ஒரு நல்ல ஆட்சி அமைக்க புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மூன்றாவது அணி நேற்று முன்தினம் அமைக்கப்பட்டது.

கூட்டணியில் அகில இந்திய கட்சியான நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு கடிதம் கொடுத்து இணைந்தது. அதனை தொடர்ந்து தற்போது அகில இந்திய மஜிலீஸ் முஸ்லிம் கட்சி கூட்டணியில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து அந்த கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் வழக்கறிஞர் ஷாகுல் ஹமீத் அவர்கள் மாநில தலைவர் ஆர் எல் வி அவர்களை, கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து புதுவையில் நடைபெற்ற மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதுவையில் மக்களுக்கான ஒரு ஆட்சியை உருவாக்க ஓர் புதிய சரித்திரம் படைக்க ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையை ஏற்று கூட்டணியில் இணைந்து செயல்பட கடிதம் கொடுத்து மூன்றாவது அணிக்கு தனது ஆதரவை தெரிவித்து உறுதிப்படுத்தினார்
என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனி மனிதன் நலனை துறப்போம்.!!!.
புதுச்சேரி நலனை முன்னெடுப்போம்.!!!.

அன்புடன்

ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.

Facebook
YouTube
Instagram
WhatsApp