திருச்சி. மார்ச் 4-
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, சமூகப்பணி முதுகலை மற்றும் ஆய்வு துறையின் முதல் ஆண்டு மாணவி செல்வி. கிருபா லக்ஷ்மி. த, உதவி பேராசிரியர் திருமதி. V. பியூலா நேச பிரியா வழிகாட்டுதலின் கீழ், ட்ரீம் இந்தியா நெட்வொர்க் நிறுவனத்தில் “ஆரோக்கியமான உடல் – அமைதியான மனம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு இல்ல ஒருங்கிணைப்பாளர்சகோதரி நிஜோ ஷாலினி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் கிருஷ்ணன், MSW,M.Phil, PGDC, MBA, (PhD), அவர்கள் உடல்நலம் மற்றும் மனநலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, சுத்தம், உடற்பயிற்சி, தியானம், சுவாச பயிற்சி போன்றவற்றை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். மேலும் பலூன் செயல்பாடு, மேஜிக்கல் கிளாப், பட்டாம்பூச்சி அணைப்பு போன்ற பயிற்சிகள் மூலம் மனஅழுத்தம் குறைக்கும் முறைகளை கற்றுக்கொடுத்தார்.
இந்நிகழ்ச்சி பயனாளர்களுக்கு நல்ல உடல் மற்றும் மனநல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election