அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையில் கடந்த 11ம் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு (FLC) பணி நடைபெற்றது
முதல் நிலை சரிபார்ப்பு பணி கடந்த 24ம் தேதி முடிவு பெற்றது. இதனையடுத்து இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை அடுத்து வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு கருவி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாதிரி வாக்கினை பதிவிட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தனர் இந்நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அதிகரிக்கப்பட்டு அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை அதன் முதல் நிலை சரிபார்ப்பு பணி குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்தினசாமி ஆலோசனை நடத்தினார்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!