கருப்பு பணம் தங்கத்தின் முதலீடு செய்யப்படுவதாகவும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மஞ்சள் கயிற்றை கையில் ஏந்தி கோரிக்கை விடுத்தனர்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான தங்கள் குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்தனர் கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் பேசும் போது வெங்காயம் தக்காளி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயரும்போது விலைவாசியை கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் உலக நாடுகள் தங்கம் விலையேற்றத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் தங்கம் விலையேற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்க இயலாத சூழல் உருவாகி உள்ளது. தங்கம் விலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு பெரிய விலையேற்றம் கண்டதில்லை. தற்போது இவ்வளவு பெரிய விலையேற்றத்தின் பின்னணியில் கணக்கில் வராத கருப்பு பணம் சந்தையில் முதலீடாக மாறி வருகிறது. பணம் படைத்தவர்களின் எண்ணமெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர். எனவே தங்கம் விலை கட்டுக்குள் கொண்டு வரும் வரை இந்திய பங்குச்சந்தையிலிருந்து தங்கம் ஆன்லைன் வியாபாரத்திற்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் தங்களது பெண்களின் திருமணத்தை நடத்த தாலி பயன்படுத்த முடியாது என்ற சூழலில் தாலியில் தங்கத்தை தவிர்த்து மஞ்சள் கயிறு தான் இருக்கும் எனவே மத்திய அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தால் இதனை உணர்த்தும் வகையில் விவசாயிகள் தங்கள் கைகளில் தங்கம் இல்லாத மஞ்சள் கயிற்றை கையில் ஏந்தியவாறு நின்றனர்

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்