வந்தவாசி, ஜூலை 22:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன்-ருக்குமாயி திருக்கோவில் பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள் வைபவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் உற்சவ மூர்த்தி அன்ன வாகனத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!