June 17, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகளையும் வழங்கியமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பயனாளிகள் கண்ணீர் மல்க தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம்:

ஜூன்-18
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், ஆனைமலை வட்டம், திவான்சாபுதூர் பகுதியினை சேர்ந்த 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களையும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடி திட்டத்தின்

கீழ் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகளையும் வழங்கியமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பயனாளிகள் கண்ணீர் மல்க தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

சமூக வலைதளம் வாயிலாக தகவல் பெறப்பட்டதின் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆனைமலை வட்டம். திவான்சாபுதூர் கிராமம். மீனாட்சிபுரம். மலைவாழ் பகுதியை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சுமதி,சித்ரா ஆகிய இரண்டு பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில்,வீட்டு மனைப் பட்டாக்கள் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலை,மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்தராம் குமார் பலர் கலந்துகொண்டனர்.

பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடித் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி, குடிநீர்,தெரு விளக்குகள் மற்றும் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படுகின்றன.தமிழ்நாடு முழுவதும் 400 நரிக்குறவர் பழங்குடியினர் மற்றும் 600 தரைப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வீட்டற்ற இருளர் காடர், முதுவர், மலசர், மகாமலசர், காணி, பளியர், இரவலன், ஆதியன் மற்றும் இதர பழங்குடியினர் என மொத்தம் 1000 பழங்குடியினர்களுக்கு வீடுகட்டித் தரப்படவுள்ளது.

அதன்படி, இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில், தரைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு 54 வீடுகள் மற்றும் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு 136 வீடுகள் என மொத்தம் 190 இலவச வீடுகள் ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, சமூக வலைதளம் வாயிலாக தகவல் கோரிக்கை பெறப்பட்டதின் அடிப்படையில் இரண்டு தினங்களுக்குள் ஆனைமலை வட்டம்,மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டம். திவான்சாபுதூர் கிராமத்தில், சித்ரா க/பெ.மாரிமுத்து மற்றும் சுமதி க/பெ.பாப்பன் ஆகிய இரு நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்ட இடத்தில் தொல்குடி திட்டத்தின் கீழ் தலா ரூ.5.07 இலட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளைபிற்படுத்தப்பட்டோர் சம்பத்குமார் வழங்கினார். நலத்துறை அமைச்சர் அதனைத்தொடர்ந்து,பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான இப்பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1250 மதிப்பில் 3 மடக்குச்சிகள், 2 கறுப்பு கண்ணாடிகளையும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.சித்ரா கண்பார்வையற்ற இரண்டு குழந்தைகளுக்கும்,மாற்றுத்திறனாளிகளுக்கான மாதந்திர உதவித் தொகை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என் பெயர் சித்ரா,என் கணவர் பெயர் மாரிமுத்து.ஆனைமலை வட்டம்.காந்தி நகர்,கணபதிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நானும் குழந்தைகளும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்.என் கணவர் தென்னை மரத்தில் இருந்து இளநீர் இறக்கம் வேலையை செய்கின்றார். எனது கணவரின் வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக எந்தவொரு சொத்தும் கிடையாது. இலவச வீட்டுமனைப் பட்டாவேண்டி சமூக ஊடகம் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையினை உடனடியாக ஏற்று,தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி,நாங்க இருக்கும் பகுதியிலே 2 செண்ட் நிலத்தை எங்களுக்கே

பட்டா போட்டு கொடுத்திருக்காங்க.நான் வசிக்கும் இடத்திற்கு பட்டாவை கொடுத்து மட்டுமல்லாமல்,தொல்குடி திட்டத்தின் கீழ் ரூ.5.07 இலட்சம் வழங்கினார்.

ஆனைமலை வட்டம்,திவான்சாபுதூர் கிராமம்,மீனாட்சிபுரம்,மலைவாழ் பகுதியை சேர்ந்த,பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சுமதி,தெரிவித்தாவது,என் பெயர் சுமதி,என்னுடைய தம்பி மற்றும் அம்மாவுடன் ஆனைமலை வட்டம்,காந்தி நகர்,கணபதிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். என் தம்பி தினக்கூலி வேலைக்குதான் சென்றுவருகிறான்.அவனது வருமானத்தில் தான் நான் வாழ்ந்து வருகிறேன். நான் பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்னால் வேலைக்கு போக இயலாது. எனக்கு ஒருமகள் இருக்கிறாள். அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

எங்களுக்குன்னு சொந்தமாக எந்தவொரு சொத்தும் கிடையாது.இலவச வீட்டுமனைப் வேண்டி சமூக ஊடகம் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்தோம்.எங்களது கோரியினை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி நாங்க வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே எங்களுக்கு வீட்டுமனையை இலவசமாக கொடுத்திருக்காங்க.

பட்டாவை கொடுத்து மட்டுமல்லாமல்,தொல்குடி திட்டத்தின் கீழ் ரூ.5.07 இலட்சம் மதிப்பீட்டில் அந்த இடத்தில் வீடுகட்டுவதற்கான ஆணையினையும் வழங்கியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்களை ஏழை மக்களின் குரலுக்கு உடனடியாக மதிப்பளித்து தகுதியின் அடிப்படையில் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கியதுடன்,வீடு கட்டுவதற்கான ஆணையினையும் வழங்கியமைக்கு முதலமைச்சர் அவர்களுக்கு கண்ணீருடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

வெளியீடு-செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்தூர் மாவட்டம்.