June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நல சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

விழுப்புரம் டிச. 15

விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் மாவட்ட கோவில் பூசாரிகள் நல சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோவில் பூசாரிகள் நல சங்கம் மாநில தலைவர் பி வாசு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகம் செய்தனர்.
இதில்மாவட்டத் தலைவராக புருஷோத்தமன் மாவட்ட செயலாளராக தீனதயாளன் மாவட்ட துணை தலைவர் கந்தன் விழுப்புரம் நகர தலைவர் வாசுதேவன் மற்றும் அனைத்து ஒன்றிற்கும் புதிதாக தலைவர் செயலாளர் பொருளாளர் என்று நியமனம் செய்யப்பட்டு நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் பேசுகையில்
கிராமப்புறங்களில் உள்ள கிராம கோவிகளில் 60 வயது கடந்த பூசாரிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரேசன் உட்பட பல்வேறு கிராமத்தில் உள்ள பூசாரிகள் கலந்து கொண்டனர்.