பத்திரிகை செய்தி
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருப்பட்டி வாய்க்காலில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசனக் கோட்டம் மூலம் மாதா கோவில் முதல் சீலா ஓடை வரையிலும், கொம்பாக்கம் அம்மன்குளம் முதல் சீலா ஓடை வரையிலும் ரூ. 18.99 கோடி செலவில் பிசிசி வடிகால் கட்டுமான பணி மற்றும் ஒதியம்பட்டு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பெரியபேட் கால்வாயை இணைக்கும் குளூனி பள்ளி சாலையின் குறுக்கே ரூ. 35.62 லட்சம் செலவில் மதகு கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, பிசிசி கட்டுமான பணி மற்றும் மதகு அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்ப்பாசனக் கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் ஷியாம், ஊர் முக்கியஸ்தர்கள் குலசேகரன், தர்மராஜ், கலியபெருமாள், திருவேங்கடம், சொக்கலிங்கம், பாலு, பாலகுரு, வேலு, நாகராஜ், வாசு, லட்சுமணன், குப்புராஜி, ராஜேந்திரன், சுந்தரம், நரசிங்கன், ஆனந்த், நாகமுத்து, விநாயகம், சிங்காரவேல், பிரபாகரன், வேலு, மணிகண்டன், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் செல்வநாதன் என்கிற ஆறுமுகம், தொமுச தலைவர் அங்காளன், துணைத் தலைவர் கதிரவன், துணை அமைப்பாளர்கள் சரவணன், காசிநாதன், தொகுதி துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, இளைஞர் அணி அமைப்பாளர் சபரிநாதன், துணை அமைப்பாளர் சூர்யா, மாணவர் அணி கோபி, பிரேம், கிளைக் கழக நிர்வாகிகள் ராஜ், தேவநாதன், ஜனா, மிலிட்டரி முருகன், பரதன், சுரேஷ், கார்த்திகேயன், பாலமுருகன், சேகர், கோடிப்பிரகாசம், பெலிக்ஸ், சந்துரு, திருமலை, சுந்தர், மதி, அரவிந்த், ராமு, முத்து, ராஜாராம், கோதண்டம், ஜீவா, ஆறுமுகம், பன்னீர், செபாஸ்டீன், தட்சிணாமூர்த்தி, அருள்மணி, பாண்டியன், அன்பு, அஞ்சாபுலி, நாகராஜ், லோகநாதன், அன்பரசன், அலீஸ்டர், பூபேஷ், ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election