February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வில்லியனூர் கொம்பாக்கம் வார்டில்ரூ. 8.7 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்!

பத்திரிகை செய்தி

வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் வார்டில் ரூ. 8.7 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி புதுச்சேரி நகராட்சி, கொம்பாக்கம் வார்டுக்கு உட்பட்ட ஒட்டாம்பாளையம் கர்மவீரர் ஆசிரியர் குடியிருப்பில் உள்ள சீலை ஓடை ஆற்றின் கரையை ரூ. 1.32 கோடி செலவில் பலப்படுத்தும் பணி, ரூ. 6.44 கோடி செலவில் ஒட்டாம்பாளையம் கர்மவீரர் ஆசிரியர் குடியிருப்பில் முதல் தெரு முதல் 10 தெரு வரை உள்ள குறுக்குத் தெருக்களில் புதிய தார்ச்சாலை மற்றும் ‘யு’ வடிவ வாய்க்கால், கொம்பாக்கம் லட்சுமி அவென்யூ மூன்றாவது குறுக்குத் தெரு தொடங்கி சிமெண்ட் களம் வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, ரூ. 30.57 லட்சம் செலவில் கொம்பாக்கம் அய்யனார் கோவில் அருகில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி என ரூ. 8.7 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய சாலை அமைத்தல், ஆழ்துளை கிணறு அமைத்தில் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், நீர்பாசனக் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் ஷாம்ஃபெயின், பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் சீனுவாசன் இளங்கோ, இளநிலைப் பொறியாளர் முருகன், பொதுப்பணித்துறை பொதுசுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி, உதவிப் பொறியாளர் ரமேஷ்குமார், இளநிலைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கந்தசாமி, பரிமளரங்கன், ஆறுமுகம், ஜெகன்மோகன், ஜனா, வேலு, தேசிகன், சுரேஷ், பாஸ்கர், விக்னேஷ், பாலதண்டாயுதபாணி, பன்னீர்செல்வம், கனகராஜ், ரச்சர்டு, அருண், பிரேம், ரவிச்சந்திரன், ரவி, பரதன், வங்கி சுரேஷ், சுகுமார், செல்வராசு, முருகையன், வரதராஜி, இளங்கோ, கார்மேகம், கார்த்தி, ராஜேஷ், அய்யனார், ஜெயபால், மணிமாறன், செல்வேந்திரன், ராமானுஜம், கோதை, பரசுராமன், ரங்கநாதன், கர்மவீரர் காமராஜர் ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், ஜெயகணேஷ், ராஜசேகர், ராமலிங்கம், ராஜசேகர், சிவக்குமார், பிரபு, இளங்கோவன், ஜெயப்பிரகாஷ், சரவணன், ராதாகிருஷ்ணன், மனோஜ், காமராஜர், சரவணக்குமார், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், அவைத்தலைவர் ஜலால் ஹனீப், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மை அணி அமைப்பாளர் முகம்மது ஹாலித், தொமுச தலைவர் அங்காளன், துணை அமைப்பாளர் சரவணன், துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் அக்பர், சுப்ரமணி, கிளைக் கழக நிர்வாகிகள் மிலிட்டரி முருகன், சொக்கலிங்கம், பாண்டியன், வெங்கடேசன், சேகர், முத்து, தர்மராஜ், பாலகுரு, ராஜேந்திரன், தட்சிணா, அபிமன்னன், பூச்சி ஆறுமுகம், தமிழ்செல்வன், அலீஸ்டர், லோகநாதன், காதர்பாஷா, விந்தியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp