வந்தவாசி ஆக. 22,
வந்தவாசியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் எறும்பூர் கை.செல்வகுமாரின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது. 400 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ராஜிய புராஸ்கார் தேர்வு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கோட்டம், வந்தவாசி ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் செய்யாறு கல்வி மாவட்ட பாரத சாரணர் சாரணிய இயக்கம், செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கம், நிழல் பவுண்டேஷன் இணைந்து முப்பெரும் விழாவை நேற்று நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், சாரணர் இயக்க ஆணையருமான எறும்பூர் கை.செல்வகுமார் தலைமை தாங்கினார். செய்யாறு கல்வி மாவட்ட பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர்- நிழல் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் ஜே. பாபு வரவேற்றார். தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் சித.ரவிச்சந்திரன், தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு அ. சுபாஷ் சந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் வி.எல். ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில சாரணப் பயிற்சியாளர் வீரபத்திரன், அரசு வழக்கறிஞர் சி.பாஸ்கரன், தமிழாசிரியர் ஏ.லோகநாதன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.விநாயகமூர்த்தி, கே.சண்முகம், எம் .நடராஜன், எஸ். சேட்டு, க.வெங்கடேசன், ஏ.காந்திமதி, கல்லூரி பேராசிரியர்கள், நிழல் பவுண்டேஷன் இயக்குனர்கள், செய்யாறு வட்ட முத்தமிழ் சங்க உறுப்பினர்கள் , சாரணர், சாரணியர். ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஓய்வு பெற்ற துணை இயக்குநர் கே.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…