February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ரோட்டுபாளையத்தில் விஜயகாந்த் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்.

மேல்மலையனூர்,ஜன.4

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் ரோட்டு பாளையத்தில் தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்றிய மகளிர் அணி செயலாளர் தீபிகா தலைமையில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கிளைக் கழக செயலாளர் அன்பரசன், கிளைக் கழக துணை செயலாளர் சீனு முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பிரதிநிதி கதிர்வேல், சாதிக், காசிநாதன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர்கள் அனைவரையும் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய கழக செயலாளர் சின்னதுரை கலந்துகொண்டு மறைந்த விஜயகாந்த் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானமாக சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கிளைக் கழக செயலாளர் வளத்தி மோகன், கடலி மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் தமிழ்,சீனு தன்சிகா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வேலாயுதம் நன்றி கூறினார்

Facebook
YouTube
Instagram
WhatsApp