June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நா த க வேட்பாளர்.

விறுவிறுப்பு இன்றி தொடங்கிய முதல் நாள் வேட்பு மனு தாக்கல்..

ஈரோடு. மார்ச் 31

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான முதல் நாள் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு இன்றி முந்தமாக இருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிக்கான சட்டமன்ற பொது தேர்தல் 2026, வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.

இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிகள் அமைத்து வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் காலத்தில் இறங்கி உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பா மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

வேட்பு மனுவை ஈரோடு மாநகராட்சி ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆர்பித் ஜெயின் வேட்பு மனுக்களை வாங்கினார்.

இதில் ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் விஜய் என்பவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக ஹரிஹரன் என்பவரும் வேட்பமும் தாக்கல் செய்தார்.

இவர்கள் இருவரும் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது சற்று வித்தியாசமாக இருந்தது.

மேலும் நேற்றைய முதல் நாள் வேட்பு மனு தாக்களின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட சுயேச்சைகள் என மொத்தம் ஐந்து பேர் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்புமனை தாக்களின் முதல் நாள் என்பதால் நேற்றைய வேட்பு மனு தாக்கல் சுறுசுறுப்பு இன்றி மந்தமாக காணப்பட்டது.

அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வதை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.