June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறையில் தொழிலாளி உயிரிழப்பு

இரும்பு பீம் மோதியதில் வெல்டர் சம்பவ இடத்திலேயே பலி

மணப்பாறை, ஜூன் 23:

திருச்சி மாவட்டம் மணப்பாறை SIPCOT வளாகத்தில் செயல்பட்டு வரும் ZAMIL STEEL நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளி ஒருவர் இரும்பு பீம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் வினோத் குமார் யாதவ் (38). இவர் உத்தரப் பிரதேச மாநிலம் சூரஜ்பூர் பகுதியைச் சேர்ந்த தரம்சாந்த் யாதவின் மகன் ஆவார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் நிறுவனத்தில் வெல்டராக பணியில் சேர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெரிய அளவிலான இரும்பு பீம் எதிர்பாராத விதமாக மோதியதில் அவருக்கு நடுநெஞ்சில் பலத்த உள் காயம் ஏற்பட்டது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.