June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பேப்பர் செய்தி

அறந்தாங்கி ஜுன் 21

புதுக்கோட்டை மாவட்டம் – பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆனி திருமஞ்சனம் தேரோட்ட திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவனடியார்களும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் -லில் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது
மாணிக்கவாசகரால் பாடப்பட்டு புகழ் பெற்ற இக்கோயி விலில் – ஆனித் திருமஞ்சன தேரோட்டம் , மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா தேரோட்டம், என ஆண்டுக்கு இருமுறை மாணிக்கவாசகருக்கான தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம்,

அதன் அடிப்படையில் ஆணி மஞ்சன திருவிழா 9 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன் பின்பு நாள்தோறும் சுவாமி வீதி உலா காட்சிகளும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் நடைபெற்று வந்த நிலையில் இன்று விழாவில் முக்கிய நிகழ்வான திருவிழா தேரோட்டம் நடைபெற்றது,

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் வீட்றிருக்க,சிவனடியார்களும் சிவாச்சாரியார்களும் தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட திருமந்திரங்களை பாட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது ,

கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் ஆடி அசைந்து தேர்பவனி வர சிவசிவா கரகோசங்களோடு தேரை வடம் பிடித்து இழுத்த னர்.
மார்கழித் திருவாதிரை
தேரோட்ட திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்,

இந்த தேரோட்டத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்

ஆவுடையார் கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.