குழந்தைகளை பாதிக்க கூடிய போலியோ நோயிலிருந்து பாதுகாக்க இந்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்துகிறது.
அந்த வகையில் புதுவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ மருந்து சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம் மற்றும் அழகானனந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று வில்லியனூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும் புதுவை மாநில முழுவதும் உள்ள கிராமம் மற்றும் நகர புறங்களில் 424 முகாம்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பூங்காக்கள், கோவில்கள் மற்றும் வணிக வளாகங்களில் 31 இடங்களிலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 74 ஆயிரத்து 124 குழந்தைகள் பயனடைந்தனர்.
பேட்டி;ரங்கசாமி முதலமைச்சர் புதுச்சேரி

More Stories
மத்தூரில் போலியோ சொட்டு மருந்து தட்டுப்பாடு:
தேசிய போலியோ சிறப்பு முகாம்!!