June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி,முதலியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அவதார தினத்தை முன்னிட்டு ஸ்தர்சன ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது

புதுச்சேரி,முதலியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோவில் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் தேவஸ்தானத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அவதார தினத்தை முன்னிட்டு ஸ்தர்சன ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது.அதன்படி இன்று கும்பஸ்தாபனம் பூஜையுடன் ஸ்ரீ ஸ்தர்சன மகா மந்திர ஜபம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சதர்சன ஸகஸ்ரநாம மஹா மந்திர ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஹா பூர்ணாஹிதி செய்யப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று கும்பப்ரோக்ஷணம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் முதலியார் பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தேவஸ்தான கௌரவ தலைவருமான ஜான்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை தொடர்ந்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டாலும்,சதர்சன ஹோமம் செய்தாலும் அதில் கலந்து கொண்டாலும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நோய்கள் விலகி,அஷ்டம சனி,ஏழரை நாட்டு சனி, செவ்வாய் தோஷங்கள், பில்லி சூனியம், பெரும்பகை அகலும், திருமண தடை விலகும், மேலும் வியாபாரம் அபிவிருத்தி போன்ற நன்மைகள் நடைபெறும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்கள் பயபக்தியுடன் பூஜைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கிழக்கே 16 திருகரங்களுடன் மேற்கே ஸ்ரீ யோக நரசிம்மனுடன் காட்சி தரும் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அவதார தினம் என்பதால் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட விழா குழுவினர் உபயோதாரர்கள் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்