June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பால்வளத் துறையில் வெண்மை புரட்சி துறை சார்ந்த பணிகளில் சிறப்பாக செயல்படும் அமைச்சர் சி. விஜயலட்சுமி…

முதலமைச்சர் ஜோசப் விஜயின் ஆலோசனைப்படி ஆய்வுகள் மேற்கொண்டு அசத்தல்…

குமாரபாளையம். ஜூன். 22

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்த பிறகு பல்வேறு துறைகள் சார்ந்த மக்களுக்கான பணிகள் முடித்து விடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சுகாதாரம், பள்ளி கல்வி துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்டவை அடங்கும். அதில் பால் வள துறையும் ஒன்று. இந்தத் துறையின் அமைச்சர் விஜயலட்சுமி பல்வேறு பால் பண்ணைகளில் ஆய்வு செய்து தனது பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு சி. ஜோசப் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்து நடைபெற்று வருகிறது.

இதில் தனது கட்சியினருக்கும், கூட்டணிக் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கி அவர்களுக்குரிய துறைகளை ஒதுக்கீடு செய்துள்ளார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி. விஜயலட்சுமிக்கு பால் மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று, தனது துரைக்கான பணிகளை சிறப்பாக செய்ய தொடங்கியுள்ளார்.

அதன்படி குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட இடங்களுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தெரிந்து, மக்களிடமிருந்து குறைகளுக்கான மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அதனை அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, குப்பை கழிவுகள் தேங்கியுள்ள பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர்களை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கான பணிகளை சிறப்பாகவும் விரைந்து முடிக்கவும் அமைச்சர் விஜயலட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காலையில் அவர் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, சென்னை தலைமை செயலகத்தில் பால்வளத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தும், ஈரோடு மாவட்டம் சித்தோடு பால் பண்ணை, சென்னையில் உள்ள முக்கியமான பால் பண்ணைகள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள பால் பண்ணைகள் மற்றும் பால் கூட்டுறவு அங்காடிகளிலும் அவர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டு எறிந்து வருகிறார்.

அதேபோல் பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை மற்றும் சலவை பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பிறகு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி. கே ராஜீவ் அவர்களை அழைத்து வந்து சாய கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு தனது பால்வளத்துறையில் ஒரு வெண்மை புரட்சிக்கு வித்துட்டுள்ள பால்வளத் துறை அமைச்சர் சி. விஜயலட்சுமியை முதலமைச்சர் ஜோசப் விஜய் பாராட்டி ஊக்கப்படுத்தி உள்ளார்.

அவரின் சிறப்பான பணியினை பொதுமக்களோடு சேர்ந்து நீதி கதிர் எக்ஸ்பிரஸ் காலை நாளிதழ் சார்பில் நாமும் பாராட்டுவோம்.

இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள். இந்த நல்ல நாளில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை, பால் மற்றும் பால்வள துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி செய்து வருகிறார்.