July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பாகூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக பாஸ்கர் தேர்வு – திமுக அமைப்பாளர் திரு. இரா. சிவா வாழ்த்து!

பாகூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தல் கடந்த மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 9 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட இயக்குநர்களின் தலைவர் தேர்வு கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் புதுவை மாநில திமுக விவசாய அணித் தலைவர் திரு. பாஸ்கர் (எ) அனந்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர் இன்று காலை புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் திரு. இரா. சிவா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.