August 1, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பள்ளிபாளையம் பகுதிகளில் தொடரும் சாயப்பட்டறைகளின் அத்து மீறல்கள்..

இரவு நேரத்தில் அடிக்கடி ஆய்வில் ஈடுபடும் அமைச்சர் விஜயலட்சுமி..

கிரிமினல் நடவடிக்கைகள் பாயுமன எச்சரிக்கை..

பள்ளிபாளையம். ஆகஸ்ட். 02

பள்ளிபாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள் விதிகளை மீறி இயங்குவதோடு, ரசாயனம் கலந்த சாயக்கழிவு நீரை வெளியேற்றுவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைவதாக கூறி அமைச்சர் விஜயலட்சுமி இரவு நேரங்களில், அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன.

கடந்த 20 ஆண்டுகாலமாக பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட சாயம் மற்றும் சலவை பட்டறைகள் செயல்பட்டு வந்தன.

பல்வேறு காரணங்களால் சாயப்பட்டறைகள் மூடப்பட்டு வரும் நிலையில், தற்போது பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் 100க்கும் குறைவான பட்டறைகளை இயங்கி வருகின்றன.

ஒரு காலத்தில் சாயக்கழிவு நீரின் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வந்தது. சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயனம் கலந்த சாயக்கழிவு நீர், அருகில் உள்ள நிலங்கள், ஏரி குளங்கள் போன்றவற்றில் நேரடியாக வெளியேற்றப்பட்டு வந்தது.

அதோடு அருகில் உள்ள காவேரி ஆற்றிலும் சாயப்பட்டறைகளின் சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயனம் கலந்த சாயக்கழிவு நீர் நேரடியாக ஆற்றில் விடப்பட்டு வந்தது.

இதன் காரணமாக சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரில் உள்ள ரசாயனம் நீர் நிலைகளில் கலந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் காவேரி ஆற்றில் உள்ள மீன்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது.

நாளடைவில் சாயப்பட்டறை கழிவு நீரால் குடிநீர் பாதிக்கப்பட்டு, அதனைப் பயன்படுத்திய பொதுமக்களும் கால்நடைகளும் பல்வேறு பெரும் நோய்களுக்கு ஆளாகி மரணம் வரை சென்று விட்டது.

இந்தப் பாதிப்புகளை தொடர்ந்து விழிப்புணர்வு அடைந்த பொதுமக்கள், சாயப்பட்டறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கினர்.

தொடர்ந்து குமாரபாளையம் பகுதியில் புதிய மாசுக்காட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் திறக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் இறங்கினர்.

இருப்பினும் அவர்களை சரி கட்டி விட்டு, வழக்கம்போல் சாயக்கழிவு நீரை வெளியேற்றி பணம் சம்பாதிக்கும் வேலையில் சாயப்பட்டறு உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வந்தனர்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு குள்ளநிலையில், சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த சாயக்கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த புதிய அரசு முடிவு செய்து, அதற்குரிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

சமீபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி கே ராஜுவ் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் திடீர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு. பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்து, சட்டவிரோதமாக செயல்பட்டு சாயக்கழிவு நீரை வெளியேற்றும் பட்டறைகளுக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் பலே கில்லாடியான சாயப்பட்டறை உரிமையாளர்கள், மின் இணைப்பு துண்டிக்க ப்பட்டு இருந்தாலும், கதவை எழுத்து மோடி சீல் வைத்திருந்தாலும், அதையெல்லாம் தாண்டி சாயப்பட்டறைகளை சட்ட விரோதமாக இன்று வரை இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சர் மான விஜயலட்சுமி, தனது தொகுதி மக்களுக்கு இந்த சாயக்கழிவு நீர் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற நோக்கத்தில் இரவு நேரங்களில் புகார் வரும் சாயப்பட்டறைகளை நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பள்ளிபாளையம் அருகே உள்ள ஒட்டமத்தை பகுதியில் செயல்பட்டு வரும் மாதேஸ்வரன் என்பவரது சாயப்பட்டறை சட்டவிரோதமாக இரவு நேரத்தில் செயல் படுவதை அறிந்த அமைச்சர் விஜயலட்சுமி அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாதேஸ்வரன் என்பவரது சாயப்பட்டறை தொடர்ந்து சட்ட விரோதமாக இயக்கப்பட்டதை கண்டறிந்து மேல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் விஜயலட்சுமி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த அரசு மக்களுக்கான அரசு. சாயப்பட்டறைகளின் இது போன்ற சட்டவிரோத செயல்பாடுகளை ஏற்க முடியாது.

தொடர்ந்து இதுபோன்று சட்ட விரோதமாக இயக்கப்படும் சாயப்பட்டறை உரிமையாளர் மீது உரிய கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ரசாயனம் கலந்த சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை வெளியேற்றி, சட்ட விரோதமாக சாயப்பட்டறைகளை இயக்கி வரும் நபர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.