அறக்கட்டளையின் தலைவர் பி ஆர் டி பரந்தாமன் குழுவினர் நட்டனர்..
திருச்செங்கோடு. ஜூன். 29
புகழ்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் மலைப்பாதை பகுதியில், நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது சரி அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில். இந்த திருக்கோவில் மலை உச்சியில் உள்ளது. இந்திய அளவில் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோவிலுக்கு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்ட வரும் இக்கோவிலுக்கு வந்து அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம்.
சிறப்பு மிக்க இந்த திருக்கோவிலில் மூலவர்களாக ஆண் பாதி பெண் பாதி என்ற வாழ்க்கை தத்துவத்தின் அடிப்படையில், இங்கே செங்கோட்டுவேல், பாவத்தாள் பெயர்களில் மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
குடும்பத்தில் கணவன், மனைவியின் ஒற்றுமையான இல்லற வாழ்க்கைக்கு இந்த திருத்தலம் உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவது மிக சிறப்பு.
கடந்த பல நூற்றாண்டு காலமாக சிறப்புமிக்க ஒரு சிவத்தலமாகவும் இந்தத் திருக்கோவில் சிறப்புமிக்க விளங்குகிறது.
கடந்த பல ஆண்டுகளாக மலை உச்சிக்கு சென்று மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் கீழிருந்து படிக்கட்டுகள் வழியாக மட்டுமே செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை இருந்து வந்தது.
தொடர்ந்து பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறையினர், ஒரு பெரும் முயற்சி எடுத்து மலை உச்சிக்கு செல்ல பாதை ஒன்றை அமைத்தனர். இந்தப் பாதை பொதுமக்கள், பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த நிலையில் மலைப்பாதையை திருக்கோவில் நிர்வாகமும் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் பராமரித்து வருகின்றன. பாதை பராமரிப்பு, மலைப்பாதை விளக்குகள், பாதையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடுவது என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் சார்பில், பாதை பராமரிப்பு மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியினை திருச்செங்கோடு நம்ம அறக்கட்டளையின் தலைவரும் பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனருமான பரந்தாமன் தலைமையில், அறக்கட்டளை சேர்ந்த குழுவினர் மலைப்பாதை பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து சமூக பணியாற்றினர்.
இந்தப் பணியினை திருச்செங்கோடு பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

More Stories
மத்தூரில் போலியோ சொட்டு மருந்து தட்டுப்பாடு:
தேசிய போலியோ சிறப்பு முகாம்!!